எழுத்தாளர் அராத்துவின் “பவர் பேங்க்” நாவல் - வாசிப்புக் குறிப்பு
எழுத்தாளர் அராத்து Notion Press செயலியல் தொடர்கதையாக எழுதிய பவர் பேங்க் நாவலை வாசித்து முடித்தேன். இக்கதையில் வரும் நான்கு முக்கியமான பாத்திரங்கள் ஆற்றல், அமண்டா, அம்ருதா, கடம்பவேல். இதில் ஆற்றல் என்கிற பாத்திரம்தான் தலைமைப் பாத்திரம். ஆற்றல் ப ணக்காரப் பின்புலம் கொண்ட ஒரு தமிழ் எழுத்தாளன். தன்னுடைய நாவல் ஒன்றை எழுதுவதற்காக இமயமலை அடிவாரத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தன்னுடைய மோட்டார் பைக்கில் பயணம் மேற்கொள்கிறான். அப்படிச் செல்லும்பொழுது அவன் எதிர்கொள்கிற சம்பவங்களே நாவலின் கதைக்கரு . ஆற்றல் சராசரி மனித வாழ்வின் ஆசாபாசங்களுடன் இருக்க விரும்பாதவன் ; எதற்கும் கட்டுப்படாதவன் ; சு தந்திரமான மனப்போக்குடன் இருப்பவன் . அதனாலேயே திருமணம் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைக் குறுக்கிக்கொள்ள வேண்டாம் என்கிற எண்ணம் கொண்டவன் . செக்ஸுக்காக ப் பெண்களுடன் பழகினாலும் அதில் மிகுந்த நாகரிகமாக இருந்து அவர்களைக் கண்ணியத்துடன் கையாள்கிறான். இந்த நாவலில் அராத்துவின் படைப்பாக்க ச் சிந்தனையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நம்முடைய இந்திய, தமிழ் மனம் நவீன சிந்தனையை ,...