தென்புலத்தார் தெய்வமுணர் படலம் (சிறுகதை)
அ அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என் அப்பா அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தடம் புரண்டு போனார். அந்த நாட்களில் என்னை விட்டு அவர் வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரைக்கும் எனக்கு அப்பாவாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பரைப் போலவும் இருந்தவர்தான். படிப்பறிவு இல்லாமல் பட்டறிவைக் கொண்டே தனக்குண்டான மரியாதையையும் மதிப்பையும் எங்கள் சின்ன கிராமத்தில் தேடிக்கொண்டவர். அவருக்கிருந்த விசாலமான பார்வையினாலேயே என்னைத் தன்னியல...